ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதி நியமனம்

0
723

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது சொத்து குவித்ததாக மகேந்திர குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை சத்தியநாராயணா உள்ளிட்ட இரு நீதிபதிகள் விசாரித்தனர்.

விசாரணையின்போது ராஜேந்திர பாலாஜி ஊழல் தொடர்பாக முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை வாக்குமூலம் தாக்கல் செய்தது.

ஆனாலும் ராஜேந்திரபாலாஜி பேரூராட்சி தலைவராக இருந்த காலம் முதல் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி சத்யநாராயணா தெரிவித்திருந்தார்.மற்றொரு நீதிபதி அது தேவையில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். எனவே 3ஆவதாக ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டியது தேதி வந்தது அடுத்து நீதிபதி நிர்மல்குமாரை 3ஆவது நீதிபதியாக நியமித்து தலைமை நீதிபதி அறிவித்தார் இதையடுத்து ஜூலை 22 ஆம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here