தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேருராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி சுடலைமாடன் .உடன்குடி பேருராட்சி தற்போதைய தலைவர் ஹிமைரா ரமீஸ்ன் மாமியாரான முன்னாள் பஞ்சாயத்து தலைவி ஆயிஷா கல்லாசி செய்த வன்கொடுமையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரது பதவி உயர்வுக்கு 3 லட்சம் லஞ்சம் கேட்டு, கொடுக்காததால் அவரை தொடர்ந்து பணி செய்ய விடாமல் தகாத வார்த்தைகளால் ஆயிஷா கல்லாசி திட்டி கொடுமைப் படுத்தி உள்ளார்.
சுடலைமாடனுக்கு ஆதரவாக குற்றவாளிகளை கைது செய்ய கோரி இன்று காலை உடன்குடி தேர்வுநிலை பேருராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் 24 பேரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள பேரூராட்சி மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.









