ஹரிக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு

0
1506

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரம் தடபுடலாக நடந்துவருகிறது. சில இடங்களில் வேட்பாளர்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. இப்படித்தான் கூந்தகுளத்தில் மேளதாளத்தோடும் வாண வெடிகளோடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்காக காத்திருந்தனர்.
தூரத்தில் நான்கைந்து கார்கள் புழுதிபறக்க வந்ததை பார்த்ததும் ஆனந்தமடைந்து மேள, தாளத்தை முழக்கினர். வாண வேடிக்கையையும் தொடங்கினர். கார்கள் நெருங்கி வந்தபின்புதான்அது சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் என்று தெரிந்தது.
எப்படியோ, எதிர்பாராமல் கிடைத்த வரவேற்பில் ஹரிநாடார் வெரி ஹேப்பி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here