தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் கழிவுநீரை அகற்றுவதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேர் வேலைக்கு வந்துள்ளனர்.
இதில் முதலில் 2 பேர் தொட்டியில் இறங்கி நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.அவர்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் மீதமுள்ள 2 பேரும் இறங்கியுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் 4 பேரும் மேலே வராததால் தொட்டியில் பார்த்த போது அனைவரும் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.










