வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி கோவை சகோதரர்கள் கைது

0
421


கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் உதயசங் கர் (34), பிரதீப்சங்கர் (32), இருவரும் சகோதரர் கள். இவர்கள் இருவரும் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் வேலைவாய்ப்பு அலுவல கம் நடத்தியதாக கூறப்ப டுகிறது. மேலும் துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கிதருவதாகவிளம்ப ரம் செய்து உள்ளனர்.
இதை நம்பி இளைஞர் கள் பலர், லட்சகணக் கில் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட
சகோதரர்கள் அவர்க ளுக்கு வேலை வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது.


இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஸ்ரீஜித் ( 23) என்பவர் அங்குள்ள மாலா போலீஸ் நிலை யத்தில் தன்னிட ம் ரூ.4 லட்சம்பணத்தைபெற்றுக் கொண்டு, ஏமாற்றிவிட்ட தாக சகோதரர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கேரள போலீசார் நேற்று கோவை வந்தனர். பின்னர், உதய சங்கர்,பிரதீப்சங்கர் ஆகிய இருவரையும் கைதுசெய்து கேரளா அழைத்து சென்ற னர். மேலும், இவர்களி டம் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here