வீடு வாகன வங்கிக்கடன் வட்டி விகிதம் குறையும் என நிர்மலா சீதாராமன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ பொருளாதார மந்த நிலை உலக அளவில் உள்ளது. சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை ஒப்பிட்டால் இந்திய பொருளாதார நிலை பாதுகாப்பாக உள்ளது. ஜிஎஸ்டி நடைமுறை எளிமையாக்கப்படும். சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு 30 நாட்களுக்குள் ஜிஎஸ்டி வரி திருப்பியளிக்கப்படும். வாகன துறை நலிவடைந்த நிலையில் அதை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீடு வாகன வங்கிக்கடன் வட்டி விகிதம் குறையும்.