சாத்தான்குளம் தந்தை மகன் தந்தை மகன் கொட்டடி கொலை தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ் ,பாலகிருஷ்ணன் காவலர்கள் முருகன் முத்து உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர இதில் ரகுகணேஷ் உடனடியாகவும் ,பாலகிருஷ்ணன் தலைமறைவான நிலையிலும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் .இந்நிலையில் இன்று அதிகாலை சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை கங்கைகொண்டான் சோதனைச்சாவடி அரு கே சிபிசிஐடி போலீசார் மடக்கினர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் .இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.














