சாத்தான்குளம் பகுதி கோவில்களில் சிறப்பு விழா – பக்தர்கள் பரவசம்

0
448

முதலூர் – கொடை விழா

ஸ்ரீ பெருமாள் சுவாமி

முதலூர் – அடையல் ஸ்ரீ பெருமாள் சுவாமி திருக்கோவில் ஆடி மாத கொடை விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் மங்கல இசை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குபேர லட்சுமி ஹோமம், மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவைகள் நடந்தது. தொடர்ந்து மதியக்கொடை நடந்தது.

சொக்கலிங்கபுரம்

சொக்கலிங்கபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிகாத்த அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மதியம் அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று மதிய பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

கட்டாரிமங்கலம்

சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமாள்

கட்டாரிமங்கலம் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோவிலில் இன்று பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாதாரணை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிவகளை

சிவகளை ஸ்ரீ சோரநாத விநாயகர் திருக்கோவிலில் 7-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது.இந்த விழாவை முன்னிட்டு பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கலந்து கொண்டு விழாவை நடத்தி வைத்தார். தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here