மூளையில் ரத்தக்கசிவு, ரத்தம் உறைவு போன்றவற்றால் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. பக்கவாதம் உள்ளிட்டவையும் மூளையின் செயல்பாட்டின் குளறுபடியால் வருகிறது.
இந்த பிரச்சினையில் ரத்த கசிவு மற்ரும் உறைவை தடுப்பதற்காக புழு போன்ற ரோபோ ஒன்றை அமெரிக்க மசாசூட்ஸ் தொழில்நுட்ப கல்லூரி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது 0.5 மீட்ட நீளமுடையது. ஜாய்ஸ்டிக் மூலம் தொலைதூரத்திலிருந்தும் இதை இயக்கலாம். காந்த சக்தி கொண்ட இந்த ரோபோ எளிதில் மூளையின் எப்பகுதிக்கும் சென்று செயலாற்றும்.
பொன்னான நேரம் என கருதப்படும் 90 நிமிடங்களுக்குள் சிகிச்சை செய்ய பெரிதும் பயன்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.













