திருவண்ணாமலையில் அத்தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் படத் தயாரிப்பாளர் தணிகை வேல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் நாற்காலிகள் பெரும்பாலும் காலியாக கிடந்ததால் கொஞ்சம் ஜெர்க் ஆன வேட்பாளர், இருந்த கொஞ்சநஞ்சம் பேரையும் அட்ராக்ட் செய்ய வாக்குறுதிகளை தாராளமாக அள்ளி வீசினார்.
இறுதியாக, ‘ என் சொந்த செலவில் திருவண்ணாமலை கோயிலுக்கு யானை வாங்கித் தருவேன்’ என்றார். அவர் பேசும்போது வராத கூட்டம், அடுத்து ஆட்டோவில் வந்திறங்கிய பிரியாணியை டேஸ்ட் செய்ய ஆவலுடன் திரண்டுவந்தது.















