தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக நுழைவாசல் இன்று காலை முதல் செய்தி பதிவாகும்பகல் 1:30 மணி வரை சாத்தப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பை பார்த்துவிட்டு கிராம மக்கள் அலுவலகத்துக்கு விடுமுறை என்று எண்ணி திரும்பி செல்கின்றனர்.
உள்ளே செல்ல முயல்புவர்களையும் விவரங்கள் கேட்டு அனுப்புகிறார்கள். நமது செய்தியாளர் கேட்டமைக்கு,’ மாடுகள் வந்து விடுகின்றன ஆகவே பூட்டி வைத்துள்ளோம் ‘ என்று பதில் தருகின்றனர்.
சிலரிடம் இன்று குவாரி தொடர்பான போராட்டத்திற்கு மக்கள் வருகிறார்கள் எனவே பூட்டி உள்ளோம் என்று சொல்லியுள்ளார்கள்.
எதுவாயினும் அரசு அலுவலகத்தை, குறிப்பாக அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் வட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி வைப்பது சரியல்ல என்று சமூக சேவகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.








