அதிமுக கொராடவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்.எல். ஏக்கள் அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, சின்னராஜ், தாமோதரன் உள்ளிட்ட அதிமுகவினர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் பொள்ளாச்சியில் நேற்று முந்தினம் முன்னாள் சட்டபேரவை துணைதலைவரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனை திமுகவினர் தாக்கியது தொடர்பாக குறிப்பிட்டு இருந்தனர்.
அதனைதொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த எஸ். பி.வேலுமணி பேசும்போது
கோதவாடி பகுதியில் குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதை அறிந்து சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அந்த குளத்தை பார்வையிட சென்றார். அப்போது திராவிட கழகத்தினர் உள்ளிட்ட அரசு பதவியில் இல்லாதவர்கள் அங்கே வந்து அவரை அவமானப்படுத்தும் வகையில் மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்குப் பின்னாலும் பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்கு போட்டுள்ளார்கள். கோவை மாவட்ட அதிமுக தொண்டர்கள் மீதும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு உள்ளார்கள். திமுகவினர் மீது எந்த வழக்கும் போடவில்லை. இதனை கண்டித்து மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம் .நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்’ என அவர் தெரிவித்தார்.














