சென்னை கோட்டையில் கொரோனா தொடர்பாக அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடந்தது. அதையடுத்து முதல்வர் அறிவித்ததாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். அவசிய காரணங்களுக்கு மட்டும் ஆட்டோ, கார் வாகனங்கள் ஓடும். தேநீர்க்கடை திறந்திருக்காது. நடமாடும் காய்கறி கடை செயல்படும்.
இடையில் வரும் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்தப்படும். 4 மாவட்டங்களிலும் குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
முக்கிய காரணமின்றி சென்னையை விட்டு பிற மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டது.














