வாணியம்பாடி அருகே சாராயம் காய்ச்ச எடுத்துச்சென்ற 1.5 டன் வெல்லம் பறிமுதல்

0
642

கடந்த இரு வாரங்களாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் கைத்தொழிலாக சாராயம் காய்ச்ச தொடங்கிவிட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தமிழக ஆந்திர எல்லை பகுதியான மாதகடப்பா பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைந்துள்ள அண்ணா நகர்,தேவராஜபுரம்,

மாதகடப்பா, உள்ளிட்ட பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டபோது சுமார் 1.5 டன் வெல்லம் ஏற்றிகொண்டு சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர் அப்போது டிராக்டர் பின்னால் 4 இருசக்கர வாகனங்களில் வந்த சாராய வியாபாரிகளை பிடிக்கும் முற்படும் போது இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு மலைபகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர்

இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்த வாணியம்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here