பயந்து பயந்து அடிப்பவர்கள் அதிமுகவினர், பகிரங்கமாக அடிப்பவர்கள் திமுகவினர் என்பது பொதுவெளியில் தொடரும் பேச்சு.
புதிய கல்விக்கொள்கையை முற்றிலுமாக புறக்கணிப்பதாக முன்பு கூறிவர்கள், இப்போது அதன் மோசமான அம்சங்களை செயல்படுத்தமாட்டோம் என்று கூறியிருப்பதும், ஆரம்ப பள்ளி வகுப்புகளுக்கு தேர்வு, வீடுதேடி கல்வி என்று கல்வி உரிமையை தன்னார்வமாக்கியிருப்பதும், கேரளவர்கள் திறக்குமளவு பேரியாற்று கட்டுப்பாட்டை விட்டுக்கொடுத்துவிட்டு, 5 மரங்களை வெட்ட அனுமதி வாங்கிவிட்டோம் என்று ஆரவாரம் செய்ததும், தமிழ் மீனவர்களை சிங்கள ராணுவம் கையால் அடித்துக் கொன்றதற்கே கொதித்தெழுந்தவர்கள், கப்பலை மோதவிட்டு கொன்றதற்கு விபத்து என்று வியாக்கியானம் செய்ததுமாக சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாட்டை விதைத்தவர்கள் திமுக ஆட்சியாளர்கள்.
எட்டு வழிச்சாலைக்கு மலையை உடைத்ததற்கு எதிர்ப்பை தெரிவித்தவர்கள், மூலிகை மதிப்பும், சுற்றுச்சூழல் சிறப்பும் மிக்க குமரி மாவட்ட மலைகளை உடைத்து மலையாள கடலுக்குள் தள்ள அனுமதிப்பதை என்னவென்பது? நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை முருகன் விமர்சித்ததற்கு சிறையில் தள்ளியாயிற்று. ஆனால், அவரது பேச்சின் உள்ளடக்கத்தை உண்மை என்று நிரூபிப்பது போல் கேரள அமைச்சர்கள் வாக்குமூலம் அமைந்ததற்கு திமுக என்ன பதில் சொல்லப்போகிறது என்றே தெரியவில்லை.
ஏனெனில், கேரள அமைச்சர் அகமது தேவர் கோவில், ‘ அதானியின் துறைமுகத்தை கட்டிமுடிக்க 80 லட்சம் டன் கற்கள் தேவைப்பட்டன. அதில், 30 லட்சம் டன் கற்கள் இதுவரை வந்துவிட்டன. 12 லட்சம் டன் கற்கள் கடலுக்குள் கொட்டப்பட்டுவிட்டன’ என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் இருந்து கற்களை எடுத்து வருவதில் சிக்கல் இருந்தது. அமைச்சர்களோடு பேசிய பின் அந்த சிக்கல் சரியாகிவிட்டது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
கல்லைத்தான், மண்ணைத்தான் சுரண்டித்தான் கொழுக்கத்தான் கற்பித்தானா?








