மதுஅருந்தியபோது தகராறு : நண்பனின் கையை வெட்டிய இருவருக்கு வலை

0
694


தூத்துக்குடி டூவிபுரம் 3ஆவது தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் லட்சுமணன் (28). இவர் தனது நண்பரான ராஜகோபால் நகரை சேர்ந்த கொம்பையா மகன் முருகனுடன் (30) சேர்ந்து மது அருந்துவது வழக்கமாம். கடந்த வாரம் மது அருந்தியபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் லட்சுமணன், முருகனை அடித்து விட்டாராம்.
இதனை முருகன் தனது நண்பரிடம் கூறியுள்ளார். இருவரும் லட்சுமணனை அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து, குடித்து கொண்டிருந்தபோது அவரின் வலது கையை அரிவாளால் வெட்டினார்களாம்.
இதில் லட்சுமணனின் வலது கை துண்டானது. அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முருகனையும் அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here