சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:
டெல்லியில் சினிமா திருத்த சட்டம் குறித்து தந்த மனு பற்றி வெளியே சொல்ல அனுமதி இல்லை. இருந்தாலும் என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் என தெரிந்தும் அந்த கருத்தை சொல்லுவதற்காக அழைத்த ஒன்றிய அரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விசாரித்தவர்கள் பேச்சு சுதந்திரத்தை போல் சிந்தனை சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதாக எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.
திமுகவை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துவது துவக்க காலம் முதல் செய்கின்ற வேலை.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தயாராகி கொண்டு இருக்கிறது. இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
சங்கரய்யாவிற்கு தந்த விருது எனக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். தமிழக மக்களுக்கும் தோழர்களுக்கும் கிடைத்த பெருமையாக க்ருதுகிறேன்.
3 மாத திமுக ஆட்சியை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் கருத்து சொல்லவில்லை.













