கேரளாவில் ஆட்டோ, கார், ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் பஸ்களில் பெண்களும் டிரைவர்களாக பணி புரிகின்றனர்.
ஆனால் அரசு துறைகளில் இதுவரை பெண் டிரைவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் படவில்லை. எனவே இந்த பாலின பாகுபாட்டை போக்கும் வகையில், அரசு துறை மற்றும் மாநில அரசின் பொதுத்துறைகளில் பெண்களையும் டிரைவராக நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக மாநில அரசின் பாலின சமத்துவ கொள்கையின் அடிப்படையில் புதிய மசோதா ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.இந்த புதிய மசோதாவுக்கு மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டால், கேரள அரசு வாகனங்களை இனிமேல் பெண்களும் ஓட்ட முடியும்.