காரில் மது கடத்திய நடிகை:ஓட்டுனரை கைது செய்த புத்திசாலி போலீஸ்

0
1367

நேற்று சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காடு சோதனைச் சாவடியில் TN07CQ0099 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா சொகுசு காரை மறித்த போலீசார், அதை சோதனையிட்டனர்.

அந்த காரில்இருந்த பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன்,அவரது சகோதரி அபிநய கிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர். காரும் ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமானது என தெரியவந்தது.

போலீசார் சோதனையில் காரில் 96 பீர் பாட்டில்கள், பிளாக் லேபிள் ரெட் 750 எம்.எல் 3 பாட்டில், பிளாக் லேபிள் பிளாக் 750 எம்.எல் 3 என மேலும் 6 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன. போலீஸார் காரை ஓட்டி வந்தசென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமாரை கைது செய்தனர்.

விசாரணையில் மது பாட்டில்கள் பற்றி தனக்குத் தெரியாது என ரம்யா கிருஷ்ணனும் சகோதரியும் கைவிரிக்க, கார் ஓட்டுநர் செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.

அப்பாவிகளாய் தப்பிச்சென்ற நடிகை ரம்யாகிருஷ்ணனும் அவரது சகோதரி அபிநயகிருஷ்ணனும் போன வேகத்தில் திரும்பிவந்து ஓட்டுநரையும் பிணையில் அழைத்துச் சென்றனர். சீன் ஓவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here