அதிமுக வெற்றி எப்படி?

0
1695

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இடைத்தேர்தல் வெற்றி பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு தோதாக அமையும் என்றாலும், நாங்குநேரியில் வேறுவிதமான கருத்து நிலவியது. அதை அடித்து நொறுக்கி ரெட்டியார்பட்டி நாராயணன் வென்றுள்ளார். தொடர்ந்து அடுத்த மாவட்ட வேட்பாளர்களை நிறுத்தியதால் மக்களிடையே வருத்தம் இருந்தது. மேலும், இடைத்தேர்தலுக்கு காரணம் வசந்தகுமார் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரம் எடுபட்டது. உள்ளூர்காரர் இமேஜ் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு வாக்குகளை குவித்தது.

அதேபோல், விக்கிரவாண்டிதொகுதியிலும் எதிர்பார்த்த வித்தியாசத்தை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தை அதிமுக அடைந்துள்ளது.

விக்கிரவாண்டி வெற்றியில் பாமகவின் பங்கு அதிகம். தொடக்கத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு, கோவிந்தசாமி படையாச்சி மணி மண்டபம் என ஸ்டாலின் உச்சம் தொட்டார். அதுவரை ஒதுங்கியிருந்த டாக்டர் ராமதாஸ் திமுகவுக்கு வன்னியர் மீது உண்மையில் அக்கறை இல்லை எனக்கூறி பிரசாரத்தை தொடங்கினார். தேமுதிகவுக்கு குறிப்பிட்ட செல்வாக்கு இருந்தாலும், விஜயகாந்த் உடல்நலத்தை மீறி பிரசாரம் செய்தாலும் அது எடுபடவில்லை.

இரு தேர்தல் காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் அணை நிரம்பி செழித்த முகமாக இருந்தது, கேரள நதிநீர் சிக்கலுக்கு குழு, டெங்குக்கு துரித நடவடிக்கை போன்ற பல நல்ல செய்திகள் அதிமுகவுக்கு துணை நின்றன.

இது தவிர, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றால்தான் நலத்திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்ற எண்ணமும், பணமும், அதிகாரிகள் ஒத்துழைப்பும் அந்தந்த அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன.

பாஜகவை கொஞ்சம் தள்ளி வைத்தது அதிமுகவுக்கு வாய்ப்பு. வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி சகாக்களை அதிகம் பயன்படுத்தாதது திமுகவுக்கு இழப்பு என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

_  சிறப்பு நிருபர் பூபாலன்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here