வக்கில் வீட்டில் திருடர்கள் செய்த மோசமான செயல்

0
307

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் நகை, பணம் கிடைக்காததால் வீட்டிலிருந்த பொருட்களை சூறையாடிச் சென்றுள்ளனர்.

தூத்துக்குடி புதுக் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை பூட்டிவிட்டு வாரணாசி சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் சுவரை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமமூர்த்தி என்பவர் அளித்த தகவலின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here