தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வந்த நிலையில், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக கடந்த 3 மாதங்கள் அந்த பணி நிறுத்தப்பட்டது.
ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதையடுத்து இன்று நாசரேத் பேருந்து நிலையம் அருகில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி. கே. ஜெயசீலன் தலைமையில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, செல்போன் டவரால் முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என கோஷமிட்டனர்.















