கடைசி நேரத்தில் நிறைவேறாத முதியவரின் கடைசி ஆசை

0
780


தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோயம்புத்தூரில் வசித்து வருகின்றனர். அக்குடும்பத்தின் முதியவர் ராஜன் (65) நேற்று இறந்தார். தான் இறந்தால் சொந்த ஊரான நாசரேத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்பது அவரது ஆசை.
அதை நிறைவேற்றும்பொருட்டு உறவினர்கள் 20 பேர் அவரை அவசர, அவசரமாக வேனில் ஊருக்கு கொண்டுவந்தனர். ஆனால், அதற்கான மின்னறு அனுமதி சீட்டு பெறவில்லை. பல சோதனை சாவடிகளை தாண்டி வந்தவர்கள் கோவில்பட்டி சோதனை சாவடியில் சிக்கிக்கொண்டனர்.
உண்மையை கூறி அதிகாரிகளிடம் மன்றாடியும் சட்டப்படி அனுப்ப முடியாது என்று கைவிரித்தனர். ஆனால், உள்ளூரில் கிறிஸ்தவ ஆலயத்தில் செபம் நடத்தி முறைப்படி அங்குள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
அதையடுத்து அங்கேயே முதியவர் ராஜனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் வேனில் வந்த 20 பேருக்கும் கொரோனா இல்லாத காரணத்தால் மீண்டும் கோயம்புத்தூருக்கு அனுப்பிவைத்தனர்.

முக்கால்வாசி தூரம் கடந்து வந்தும் ஊரை அடைந்து முதியவரின் ஆசையை நிறைவேற்ற முடியாத வருத்தத்தில் உறவினர்கள் திரும்பிச்சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here