கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாகநெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகியவை சிகப்பு மண்டலமாக மாறிவிட்டன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களும் சிகப்பு மண்டலமாக ( Red Zone )ஆக மாறியுள்ளன. மும்பை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து ஊருக்கு திரும்பியவர்களால் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, நாமக்கல், சேலம், தஞ்சை, தர்மபுரி ஆகியவை ஆரஞ்சு மண்டலமாக உள்ளன.











