ஆப்கானிஸ்தானில் அரசு படைகள் தாக்குதல்; ஆளுநர் உயிரிழப்பு

0
475

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அந்த நாட்டில் பாதுகாப்பு நிலைத்தன்மையற்ற சூழ்நிலை உள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்நாட்டு ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், பதக்ஷான் பகுதியின் ஆளுநராக உள்ள கியாரி பசிஹுதீன் என்பவர் வார்தஜ் மாவட்டத்தில் நடந்த அரசின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலில் பசிஹுதீனின் காவலர்களில் ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது. எனினும் ராணுவ அமைச்சக அறிக்கையை தலீபான் அமைப்பு மறுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here