ஆளுங்கட்சி அரசியல் பினாமி கல் குவாரிக்கு எதிராக போராடியவர் மர்ம பலி – பொதுமக்கள் காவல் அலுவலகம் முற்றுகை

0
2781


திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள சூச்சிகுளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் மணி. இவர் இவர் அந்த பகுதியில் உள்ள கல் குவாரி எதி ராக பல போராட்டங்கள் நடத்தியவர் ஆவார்.

அதில் தெற்கு தெற்கு கருங்குளம் அருகே அமைந்துள்ள பிரபல ஆளும் கட்சி அரசியல் பிரமுகரின் பினாமி கல்குவாரி மூடக்கோரி போராடியதும் அடங்கும்.

ஏற்கனவே அந்த கல் குவாரி திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பெரும் தொகை அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு காரணமாக கருதப்பட்ட சப் கலெக்டர் மற்றும் எஸ்பி உடனடியாக மாற்றப்பட்டனர்.

இந்த சூழலில் நேற்று மாலை மணி நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது காவல்கிணறு விலக்கிலிருந்து பின்தொடர்ந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மணியின் மீது மோதியது கல்குவாரி லாரி என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல் துறையினரோ அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூச்சி குளம் பொதுமக்கள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக பணகுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here