ஒசூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். ராதாகிருஷ்ணன் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சமீபத்தில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் ராதாகிருஷ்ணனை விசாரிக்க போலீசார் அவர் வீட்டுக்கு சென்றனர். அவர் தலைமறைவானதால் அவரது மனைவி மரகதம் மற்றும் மகனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணை அதிரடியாகவும் அடிக்கடியும் நடந்ததால் விரக்தி அடைந்த மரகதம், பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.














