கூடங்குளம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தொலைவில் கரை ஒதுங்கியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் இது கூடங்குளம் அணுமின் நிலையத்தால் வந்த கதிர்வீச்சால் உயிரிழந்தது என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவலை பரப்பி வந்தனர்.
இந்த நிலையில் ஞஇது குறித்து தமிழ்நாடு அரசு ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு அவைகள் விற்பனை ஆகாததால் கடலில் கொட்டப்பட்டுள்ளன அந்த மீன்கள் கடற்கரை ஓரம் ஒதுங்கியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.