குடும்பச் சண்டையை தடுக்கச் சென்ற காவலரை தாக்கிய இருவர் கைது

0
467

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக இருந்து வருபவர் சதீஷ்குமார். கடந்த 12 ஆம் தேதி கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சதீஷ்குமார் ரோந்து சென்றார். அப்போது அழுது கொண்டே வந்த பெண் ஒருவர் தனது கணவர் குடித்துவிட்டு தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சதீஷ் குமார் நேரில் சென்று இருவரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தபோது குடிபோதையில் அந்த பெண்ணின் கணவர் உட்பட 4 பேர் இணைந்து காவலர் சதீஷ் குமாரை தாக்கி, சட்டையைக் கிழித்து அவதூறாகப் பேசி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து சதீஷ் குமார் அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் போலீசார் குடிபோதையில் இருந்த பெயிண்டராக பணி புரியும் பிரேம் குமார்(30) மற்றும் அவரது நண்பர் பிரபாகரன்(27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல், அரசு ஊழியரை கடமை செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here