ஆதார் எண்ணை பயன்படுத்தி நூதனமுறையில் பணம் பறிப்பு

0
841


கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். மாற்றுத்திறனாளிகள் இருவரும் காப்பகத்தில் வசித்து வருகின்றனர். மகள் உறவினர் வீட்டில் வசித்து வருவதாக தெரிகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகைக்காக 13 வயது மகள் விண்ணப்பித்தார். அப்போது அந்த விண்ணப்பத்தில் அந்த சிறுமியின் ஆதார் எண்ணிற்கு பதிலாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்த நபர் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணை சேர்த்துக் கொண்டதாக தெரிகிறது. மேலும் அந்த நபர் தனது வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்துவிட்டார். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கவேண்டிய மாதாந்திர உதவித் தொகையை அந்த நபர் மாதந்தோறும் வாங்கி வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த விவரம் அறிந்த 13 வயது சிறுமி  கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். டி. எஸ்.பி சங்கு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மோசடி செய்த நபர் மாற்றுத்திறனாளி என தெரியவந்தது. இவர் 7 ஆயிரத்து 250 ரூபாய் மோசடியாக அபகரித்திருந்தார். இவர் மோசடி செய்த தொகையை போலீசார் மீட்டு பார்வையற்ற தம்பதிகளிடம் ஒப்படைத்தனர்.மோசடி செய்த மாற்றுத்திறனாளியை எச்சரித்து விடப்பட்டார்.

வங்கி நிர்வாகத்திடம் பேசி 13 வயது சிறுமியின் ஆதார் எண் இணைத்து முறைப்படி உதவித்தொகை வழங்க சைபர் கிரைம் போலீசார் உதவி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here