மதுரை அனுப்பானடி பகுதியில் சமூக ஆர்வலராக உள்ள முருகானந்தம். அவரது இரு சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றுள்ளனர். அவரைப் பிடிக்காத சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டு வீசினார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்று, மதுரை தெப்பக்குளம் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சூழலில் அப்பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக
பலமுறை காவல் துறையிடம் புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.













