குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா

0
1322

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வசந்தகுமார் எம்.பி. கொடி ஏற்றி வைத்தார். காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த விழாவில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றி வைத்தார். நகர தலைவர் அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ் மற்றும் நிர்வாகிகள் தேவ், முத்துராமன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here