கறம்பக்குடியை சேர்ந்த நர்ஸ் வினிதா தனது டிக் டாக் மோகத்தால் தோழியுடன் ஓட்டம் பிடித்ததாக போலீசாரும் உறவினர்களும் கருதிய நிலையில், இப்போது திரும்பிவந்து, ‘கணவர் தாக்கியதால்தான் தலைமறைவானேன். தோழி அபிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நகையுடனும் செல்லவில்லை. அவற்றை எனது கணவர் வெளிநாடு செல்வதற்காக அடகு வைத்துவிட்டார்’ என்று கூறியுள்ளார்.
அபிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த இரு நாட்களாக பரவிய தகவல் அவருக்கு தர்ம சஙக்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த பிரச்சினைக்கும் அடிப்படை காரணம் ஒன்றிருக்கும். அதுமட்டுமல்ல, நவீன தொழில்நுட்பத்தால் வரும் கலாச்சார குழப்பத்தை உணர்ந்து தெளிவதற்கும், அதன் தாக்கத்தை நேரிய முறையில் சமாளித்து விடுபடுவதற்கும் குடும்ப, சமூக அளவில் பொறுப்பான சுமூகமான அணுகுமுறை தேவை என்கின்றனர் மனநல வல்லுநர்கள்.
டிக்டாக் மோகத்திலிருந்து வினிதா மெல்ல, மெல்ல விடுபட அன்பை செலுத்தி முயன்றிருக்கவேண்டும். கணவரின் ஆணாதிக்க, குடும்பத்தினரின் கறார் ஒழுக்க நடவடிக்கைகள் எதிர்மறை விளைவையும், தேவையற்ற பகிரங்கத்தையும் ஏற்படுத்திவிட்டது என்பது அவர்கள் கருத்து.














