ஜாமீன் தேவையா? மரம் நடுங்கள்: தூத்துக்குடி நீதிமன்றம் நூதனம்

0
608

தூத்துக்குடி மட்ட க்கடை சேது ராஜா தெருவை சார்ந்த கணேசன் மகன் ஹரிஹரன் கடந்த 17.10.2019ல் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை அவதூறாக பேசி அடித்ததாக சிப்காட் காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன் ஜாமின் கோரி தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிசய குமார் மூலம் ஹரிஹரன் மனுத் தாக்கல் செய்தார்
மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் விஸ்வநாத், தினமும் மூன்று மரக்கன்றுகள் வீதம் 10 நாட்கள் அரசு தொழில் பயிற்சி கல்லூரியில் நட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி அரசு தொழில் பயிற்சி மையத்தில் ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், மரம் நமக்கு நண்பன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை தாங்கியபடி ஹரிஹரன் மரக்கன்றுகளை நட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here