மதுரை கரிமேடு இளந்தோப்பு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தினுள் மின்சார வயரிங் பணி நடந்து கொண்டிருந்த போது இருவர் தவறி விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொருவருக்கு கால் முறிந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.













