நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய லட்டு போன்ற வாய்ப்பை சுயேட்சை வேட்பாளர் எடுத்துக்கொடுத்தும், காங். தரப்பில் கண்டுகொள்ளாமல் இருந்தது அதிசயமாக இருந்ததால் அந்த தரப்பு பற்றி ஆராயவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அதில் காங். வேட்பாளர் ரூபி மனோகரனை பற்றி சென்னையிலிருந்து வரும் தகவல்கள் திடுக்கிட வைப்பதாக உள்ளது. கட்டுமான நிறுவனம் என்றாலே புறம்போக்கு நிலங்களை குறிவைப்பது இலக்கு. முதலில் ரியல் எஸ்டேட்காரராக தொழிலை தொடங்கி பிடராக பில்ட் அப் ஆன மனோகரன் மட்டும் விதி விலக்கா என்ன?
தனது ரூபி பில்டர் மூலம் சேலையூர் ஏரியை ஆக்கிரமித்து அவர் அடுக்குமாடி கட்டியது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து 2014லேலே வழக்கு பதிவு செய்தும் கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேலையூர் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்வதற்காக சர்வே எண் 145/3ல் ஜேசிபி மூலம் கரையை உடைத்தது தொடர்பாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் குஜராஜ் 30.08.2014ல் தொடுத்த வழக்கு மர்ம மரணம் அடைந்தது. ஆனால், அந்த பொதுப்பணித்துறை அதிகாரியையே தூக்கிவிட்டு வேறொருவரை அங்கு தனது செல்வாக்கில் ரூபி பில்டர் மனோகர் போட்டுவிட்டார். இதுபற்றியும் அவரது மனுவில் தகவல் இல்லை என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். இன்னும் பல தொழில் ரகசியங்களும் அவரை சுற்றி உலாவுகின்றன.














