தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்ட அப்துல்லா பூர்மேட்டில் தாசில்தாராக பணியாற்றியவர் விஜயா ரெட்டி.
அதே பகுதியை சேர்ந்த விவசாயியான சுரேஷ், தனது நிலத்தை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி பட்டா புத்தகம் வழங்கியது பற்றி தாசில்தாரிடம் முறையிட்டார். தொடர்ந்து 15 நாட்களாக தாசில்தார் அலுவலகத்துக்கு அலைந்தார்.
இது தொடர்பாக ஏற்கனவே அப்துல்லா பூர்மேட் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கிறார். ரங்கா ரெட்டி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். எனினும், தன்னுடைய நிலத்தை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி பட்டா புத்தகங்கள் வழங்கிவிட்டதற்கு நடவடிக்கை இல்லாததால் தாசில்தார் விஜயா மீது கடுமையான ஆத்திரம் ஏற்பட்டது.
இதையடுத்து நான்கு நாட்களுக்கு முன்பு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்ற சுரேஷ், விஜயா ரெட்டி அறைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு விஜயா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தார்.
விஜயாவை காப்பாற்ற சென்ற கார் டிரைவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. சுரேஷ் மீதும் தீப்பற்றியது. அவர் உஸ்மானியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கார் டிரைவர் நேற்றும், விவசாயி சுரேஷ் இன்றும் இறந்தனர்.













