ஸ்ரீவை.யில் மாணவியை கேலி செய்ததை தட்டிக் கேட்ட முறுக்கு கடைக்காரர் வெட்டி கொலை

0
1036

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்நாதன்(43).

ஶ்ரீவைகுண்டம அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு கடை நடத்தி வருகிறார்

இன்று மாலை செந்தில்நாதன் கடையில் இருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்மக்கும்பல் திடீரென அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

செந்தில்நாதன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து செந்தில்நாதன் உடலை மீட்டு ஶ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவியை கேலி செய்தவர்களை தட்டி கேட்ட காரணத்தால் செந்தில்நாதன் கொலை செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here