சசிகலாவின் ரூ.1600 கோடி சொத்து முடக்கம்

0
1421

சசிகலா மீது ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கு இருந்த நிலையில், பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் கிளீன் மனி’ நடவடிக்கையில் பினாமி சொத்துக்களை கண்டுபிடித்ததாக வருமான வரி அதிகாரிகள் கூறினர். 187 இடங்களில் நடத்திய சோதனைகளில், பணியாளர்கள், கார் ஓட்டுநர் பெயர்களில் கண்டறியப்பட்ட 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 சொத்துக்களை பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனை சட்டப்படி முடக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், கோவையில் உள்ள செந்தில் பேப்பர் அன்ட் போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன சொத்துக்களை முடக்கி, தகவலை நிறுவனங்களின் பதிவாளருக்கும், பெங்களூரூ பரப்பனஹள்ளி அக்ரஹார சிறையிலிருக்கும் சசிகலாவுக்கும் அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here