தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவி ஒருவருக்கு தலையில் அடிபட்டதன் காரணமாக ஸ்கேன் எடுக்க அங்கு மாணவியை அழைத்துக்கொண்டு சமூக ஆர்வலர் ஒருவர் சென்றிருந்தார். அப்போது அங்கு ஸ்கேன் எடுக்க ஆள் இல்லாததால் இது குறித்து மருத்துவ கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க சென்ற போது அவர் செல்போனை பயன்படுத்திக் கொண்டு பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.