திமுக பிரமுகர் மீது அவதூறு – நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது

0
1329

தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகே உள்ள பிரண்டார்குளத்தை சேர்ந்த மரிய அலெக்ஸ் மகன் ஞானராஜ் (30). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

அங்கிருந்து போலி முகநூல் முகவரிகள் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞரும் திமுக பிரமுகருமான கிஸ்ஸிங்கர் என்பவரை பற்றி தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பியதாக அவர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த ஞானராஜை நேற்று தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். ஞானராஜ் நாம் தமிழர் கட்சி யை சேர்ந்தவர். தனிப்பட்ட பகை காரணமாகவே இவர் கிஸ்ஸிங்கர் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு வெளியிட்டுள்ளார்.

போலீசார் கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஞானராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here