தூத்துக்குடி ராஜீவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி சிலர் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தாக போலீசாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து முத்தையாபுரம் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இன்று போலீசாரிடம் சிக்கினர். இதில், முத்தையாபுரம் மோத்தா ரவி மகன் வேல்முருகன், அவரது தம்பி மாரிச்செல்வம், கிருஷ்ணசாமி மகன் இசக்கி செல்வம்,தாளமுத்துநகர் ராமர் மகன் டைட்டஸ், முத்தையாபுரம் கருப்பசாமி மகன் கௌதம் ஆகியோர் அடங்குவர்.
இதில்,வேல்முருகன் மீது கோவில்பட்டி, சேலம் மேட்டூர், மதுரை காரியாபட்டி போன்ற பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி கஞ்சா கடத்தல் வழக்குகள் உள்ளன.








