‘வாக்குவாதம் நடந்தது, சமாதானமாக போய் விட்டோம்’ ஏட்டை தாக்கிய அமைச்சர் அனிதா பிஏ வாக்குமூலம்

0
787

திருச்செந்தூர் கோயில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தியது தொடர்பாக நேற்று காலை ஏட்டு ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் கிருபா அவரை கன்னத்தில் அறைந்தார். ஏட்டு காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டு ஆஸ்பத்திரியில் படுத்தார்.

ஆனாலும் இன்று பிற்பகல் வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் விவாதமாக சமூகவலைத்தளங்களில் மாறியது.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிஏ கிருபா அளித்த வாக்குமூலத்தில், ‘நேற்று காலை வாகனத்தை பார்க் செய்வது தொடர்பாக ஏட்டுடன் வாக்குவாதம் நடந்தது. இப்போது நாங்கள் சமாதானமாகப் போய் விட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்டு சமாதானமாக புகார் முடித்து வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here