திமுக ச.ம.உறுப்பினர் அன்பழகன் இரு நாட்களுக்கு முன்பு கரோன பாதிப்பின் காரணமாக சென்னை குரோம்பேட்டை ரெலோ ஆராய்ச்சி நிறுவன மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்திலிருந்தே அவர் குடல்நிலை குறித்து மோசமான தகவல்கள் வந்தாலும், படிப்படியாக அவர் நலம் பெற்றே வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனை இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவருக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால் இதய செயல்பாட்டுக்காக சுவாச கருவி ஒத்துழைப்புடன் சிகிச்சை அளிப்பதாகவும், ஏற்கனவே இருக்கும் சிறுநீரக பாதிப்பு காரணமாக நிலமை மோசமாகவே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.