கியார் புயலில் 100 மீனவர்கள் மாயம்

0
1421

கடந்த சில நாட்களாக குழந்தை சுஜித் துயரத்திற்கிடையே தமிழகத்தை உலுக்கிய மற்றொரு துயரம் கியார் புயல். இந்த புயல் வீச்சில் தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த 10 படகுகளில் மீன் பிடிக்கச்சென்ற 100 மீனவர்களை இதுவரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு படையினருடன் மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களை தேடுவதற்கு ‘ஏரியல் சர்வே’ எனப்படும் வான்வழித் தேடல் முறையை கையாளவேண்டும்’ என தூத்தூர் பகுதி பங்கு தந்தையர் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து கூறிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், ‘ இதுவரை இரண்டு படகுகளில் உள்ள மீனவர்களோடு பேசி அவர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும், தகவல் அளிக்கப்பட்ட மூன்று படகுகளில் உள்ள மீன்வர்களை தேடி, தொடர்பு கொள்ள முயற்சி செய்துவருகிறோம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here