சிறுமிக்கு பாலியல் கொடுமை – காண்ட்ராக்டருக்கு 15 ஆண்டு சிறை

0
497

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமாரி (45). கட்டட ஒப்பந்ததாரர். இவர் கடந்த 2019ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டது. பிச்சைமாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு, திருவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி பூரணஜெயஆனந்த், குற்றவாளி பிச்சைமாரிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here