முழு ஊரடங்கை முன்னிட்டு அரக்கோணம் கோட்டம் இருப்புப்பாதை துணை ஆணையர் ப்ரித் தலைமையில் இன்ஸ்பெக்டர் மார்க், சப் & இன்ஸ்பெக்டர் அன்புசெழியன் மற்றும் போலீசார் நேற்று அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வரும் ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பதியில் இருந்து வந்த சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் கேட்பாரற்று இருந்த 4 சிறிய பைகளில் 100 மது பாட்டில்களும், மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் இரண்டு சூட்கேஸ்களில் 54 மது பாட்டில்களும் இருந்தன.
அவற்றை ஆந்திர மாநிலம் புத்தூரில் இருந்து சென்னைக்கு மறைத்து எடுத்து வந்த சென்னை தாழம்பூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (37), ஜாகிர்முல்லா அஸ்லாம்(22), சபீர்(37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதுபாட்டில்களின் மதிப்பு ரூபாய் ஐம்பதாயிரம் என்று போலீசார் தெரிவித்தனர்.













