கிறிஸ்தவ ஆலயத்தில் சிலை சேதம்

0
1284


கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிரினிடி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் உதவி பாதிரியாராக பாஸ்டின் ஜோசப்( 32) என்பவர் பணிபுரிந்து வருகிறார் . நேற்று முழு ஊரடங்கு என்பதால் ஆலயத்தில் பிரார்த்தனைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் ஆலய வளாகம் பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரவு ஆலயத்தின் வாட்ச்மேன் ஜான்சன் என்பவர் செல்போன் மூலம் உதவி பாதிரியார் பாஸ்டின் ஜோசப்பை அழைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்த ஆலயத்தின் செபஸ்தியார் சிலையை சேதப்படுத்தி சென்றதாக கூறினார்.

இதுபற்றி வாட்ச்மேனிடம் விசாரித்தபோது மர்ம நபர்கள் இருவர் பைக்கில் வந்ததாகவும
அவர்கள் பூட்டி இருந்த கதவின் மீது ஏறி உள்ளே வந்து செபஸ்தியார் சிலை அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பீடத்தை கற்களை வீசி எறிந்து உடைத்து சிலையை சேதப்படுத்தி விட்டு பின்னர் பைக்கில் தப்பிச் சென்றதாகவும் கூறினார்.

இதையடுத்து பாஸ்டின் ஜோசப் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here