கோவை, நாகூர், காயல்பட்டினத்தில் என்.எஸ்.ஏ. சோதனை

0
734

கோவை, நாகை பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.எஸ்.ஏ) சோதனை நடந்தது.
கோவையில் ஏற்கனவே இந்தாண்டு ஜூலையில் தேசிய புலனாய்வு முகமையின் சோதனை நடந்தது. அதையடுத்து இன்று காலை லாரிபேட்டையில் செளருதீன், ஜி.எம்.நகரில் சமீர்  ஆகிய இருவர் வீட்டில் சோதனை நடத்தினர். அவர்களிடமிருந்து கைபேசிகள் கைப்பற்றப்பட்டன.
அதே வேளையில், நாகை நாகூர் மியாந் தெருவில் முகமது அஜ்மல் என்பவரது வீட்டுக்கு சோதனையிட சென்றனர். அங்கு ஆள் இல்லாத நிலையில், ஏடிஎம் காலனியில் உள்ள சாதிக் அலி என்பவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் அஜ்மல் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில், கேடிஎம் தெருவில் வசிக்கும் சாலிக் என்ற வாடகை கார் ஓட்டுநர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here