சிறுவைகுண்டம் அருகே உள்ள வல்ல குலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவர் மைக்செட் தொழில் செய்து வருகிறார். கடந்த 22ஆம் தேதி இவர் தொழிலுக்காக வெளியூர் சென்றார். இவரது மனைவி ஜெயராணி பகலில் கடைக்கு சென்றதை கண்காணித்த யாரோ வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த பத்து பவுனுக்கு அதிகமான நகை திருடி சென்றனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் சென்றது போலீசார் வந்து ஆய்வு செய்ததில் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வோர் மட்டுமே நகையை எடுத்து இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஒட்டிய பூந்தொட்டியில் சாணிக்குள் பொதிந்த நிலையில் திருடப்பட்ட நகைகள் இருந்ததை ஜெயராணி கண்டார்.
ஆனாலும் நகையில் 5 கிராம் குறைந்திருந்தது இதுகுறித்து மீண்டும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.







